காஷ்மீர், குல்மார்கில் உள்ள உலகப் புகழ்பெற்ற ஸ்கை ரிசார்ட்டுக்கு சுற்றுலா பயணிகள் செல்ல தொடங்கியுள்ளனர்.
காஷ்மீர், உத்தரகாண்ட், இமாச்சல பிரதேசம் போன்ற மலைப்பிராந்திய மாநிலங்களில் பனிப்பொழிவு மற்றும் குளிரின் தாக்கம் அதிகரித்து இருந்தது.
உத்தரகாண்ட், காஷ்மீர் உள்ளிட்ட மாநிலங்களில் முக்கிய சுற்றுலாத்தள பகுதிகளில், திரும்பும் திசையெங்கும் வெண்போர்வை போர்த்தியது போல் பனி படர்ந்து இருந்தது.
இதனால் விடுமுறை நாட்களில் சுற்றுலா பயணிகள் முக்கிய சுற்றுலாத்தள பகுதிகளுக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இந்நிலையில் தற்போது காஷ்மீரில் பனியின் தாக்கம் சற்று குறைந்து காணப்படுகிறது.
இதனால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியாக சுற்றுலாத்தளங்களுக்கு செல்ல தொடங்கியுள்ளனர். இந்நிலையில் குல்மார்கில் உள்ள உலகப் புகழ்பெற்ற ஸ்கை ரிசார்ட்டுக்கு சுற்றுலா பயணிகள் செல்ல தொடங்கியுள்ளனர்.
காஷ்மீர் குல்மார்க் பகுதிகளில் இரண்டு மாதங்களுக்கும் மேலாக வறண்ட காலநிலை காரணமாக, சுற்றுலா பயணிகள் வருகை பாதிக்கப்பட்டது, பல சுற்றுலாப் பயணிகள் தங்கள் பயணங்களை ரத்து செய்தனர்.
பனிப்பொழிவுக்குப் பிறகு குல்மார்க் ஸ்கை ரிசார்ட்டுக்கு 30,000 பார்வையாளர்கள் வருகை தந்துள்ளனர். குல்மார்க்கில் உள்ள அனைத்து ஹோட்டல்களும் பிப்ரவரியில் முழுமையாக முன்பதிவு செய்யப்பட்டுள்ளன. பனிக்கு பிறகு காஷ்மீரில் சுற்றுலா தளங்கள் மீண்டும் எழுச்சிபெற்றுள்ளது.