காஞ்சிபுரம் ஆதி காமாட்சி அம்மன் கோயிலில் முதல்முறையாக வள்ளி கும்மி ஆட்டம் வெகு விமரிசையாக நடைபெற்றது.
பிரசித்தி பெற்ற ஆதி காமாட்சி கோயிலில், ஆடி மாத பெருவிழாவையொட்டி, 100 கலைஞர்கள் கலந்து கொண்டு, வள்ளி கும்மி நடனமாடி அசத்தினர். இதனை, ஏராளமான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் ஆர்வத்துடன் கண்டு மகிழ்ந்தனர்.
 
                                             
                                             
                                             
                                             
                                             
                                             
                                             
                                             
                                            
 
             
                         
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                







 
                                     
                                     
                             
                                                         
                                
                         
                                                 
                                                 
                                                 
                                                 
                                                