ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் ஆடி பெருவிழாவையொட்டி, பர்வதவர்த்தினி அம்பாள் பூப்பல்லக்கில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
ராமநாதசாமி கோயிலில் ஆடி திருக்கல்யாண உற்சவ விழாவின் பதினொன்றாவது நாள் நிகழ்வாக, பர்வதவர்த்தினி அம்பாள் தோழிகளுடன் பூப்பல்லக்கில் எழுந்தருளினார். இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு, சுவாமி தரிசனம் செய்தனர்.
 
                                             
                                             
                                             
                                             
                                             
                                             
                                             
                                             
                                            
 
             
                         
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                







 
                                     
                                     
                                     
                             
                             
                                                         
                                
                         
                                                 
                                                 
                                                 
                                                