சமீபத்தில் ‘டொக்சூரி' சூறாவளியின் தாக்கத்தால், வட சீனா உள்ளிட்ட பகுதிகளில் தீவிர மழை பெய்துள்ளது. இதன் பாதிப்பினால், வெள்ளப்பெருக்கு, நிலவியல் சார்ந்த பேரிடர்கள் ஆகியவை நிகழ்ந்தன. இவை பெய்ஜிங், ஹெபெய் ஆகிய பகுதிகளில் உயிரிழப்பு மற்றும் காயங்களை ஏற்படுத்தியுள்ளன.
இது குறித்து சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் வெள்ளக் கட்டுப்பாடு மற்றும் பேரிடர் மீட்புதவிப் பணி குறித்து உத்தரவை பிறப்பித்தபோது காணாமல் போனோர் மற்றும் அபாய நிலையில் சிக்கிய மக்களை தேடி மீட்கும் பணியை முழு மூச்சுடன் மேற்கொண்டு, இயன்ற அளவில் உயிரிழப்பைக் குறைக்க வேண்டும் என்றும் போக்குவரத்து, தொலைத்தொடர்பு, மின்னாற்றல் உள்ளிட்ட பாதிக்கப்பட்ட
அடிப்படை வசதிகளை மீட்டெடுத்து, இயல்பான வாழ்க்கை மற்றும் உற்பத்திக்கு கூடியவிரைவில் திரும்ப வேண்டும் என்று சுட்டிக்காட்டினார்.