ஆகஸ்ட் மாத தொடக்கத்தில் அதிரடியாக குறைந்த தங்கம் விலை நேற்று முன்தினம் மீண்டும் அதிகரித்தது. இன்று 22 காரட் தங்கம் கிராமுக்கு 5 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் 9295 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் 40 ரூபாய் உயர்ந்து 74, 360 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
24 கேரட் தூய தங்கத்தின் விலை ஒரு கிராம் 6 ரூபாய் உயர்ந்து 10, 140 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் 81, 120 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை மாற்றம் இன்றி ஒரு கிராம் 123 ரூபாய்க்கும் ஒரு கிலோ வெள்ளி 1, 23,000 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது