உலக வர்த்தக அமைப்பு நிறுவப்பட்ட 30ஆவது ஆண்டு நிறைவுக்கான கொண்டாட்ட நிகழ்ச்சி 10ஆம் நாள் நடைபெற்றது.
நிகழ்ச்சியின் போது, ஸ்விட்சர்லாந்து, சிங்கப்பூர் உள்ளிட்ட 41 நடுத்தர மற்றும் சிறிய நாடுகள் பலதரப்பு வர்த்தக அமைப்பு முறையின் கூட்டாளி என்ற முன்மொழிவை வெளியிட்டன.
உலக வர்த்தக அமைப்பின் விதிகள் தொடர்பான வாக்குறுதியைப் பல்வேறு தரப்புகள் மீண்டும் வலியுறுத்தி வர்த்தகத்தின் திறப்பைப் பேணிக்காக்க வேண்டும் என்றும், தற்போதைய அறைகூவல்களை மேலும் செவ்வனே சமாளிக்கும் வகையில், புத்தாக்க வழிமுறையின் மூலம், உலக வர்த்தக அமைப்பின் சீர்திருத்தத்தைக் கூட்டாக முன்னேற்ற வேண்டும் என்றும் இம்முன்மொழிவில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்ச்சியில் சீனப் பிரதிநிதி கூறுகையில், பாதுகாப்புவாதத்திற்கு வழி இல்லை. திறப்பு மற்றும் ஒத்துழைப்பு தான் சரியான வழி ஆகும். பல்வேறு தரப்புகளுடன் இணைந்து உண்மையான பலதரப்புவாதத்தை நடைமுறைப்படுத்தி உலக வர்த்தக அமைப்பின் விதி முறையை உறுதியாகப் பேணிக்காத்து உலகப் பொருளாதாரத்துக்கு மேலதிக நிலைப்புத் தன்மை மற்றும் கணிக்க கூடிய தன்மையைக் கொண்டு வரச் சீனா விரும்புகிறது என்றார்.