ஜார்க்கண்ட் முக்தி மோச்சா கட்சியின் நிறுவனர் மற்றும் மூத்த தலைவராக இருந்த, முன்னாள் முதல்வர் சிபு சோரன் (வயது 81) இன்று உயிரிழந்தார்.
சிறுநீரக கோளாறு காரணமாக கடந்த ஜூன் மாத இறுதியில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், தொடர்ந்து வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்றுவந்த நிலையில், சற்றுமுன் அவரது உயிர் பிரிந்ததாக குடும்பத்தினர் அறிவித்துள்ளனர்.
அவரது மறைவு மாநில அரசியலிலும், பழங்குடி மக்களிடையிலும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மாநில முன்னாள் முதல்வராக மூன்று முறை பதவி வகித்தவர் சிபு சோரன், ஏராளமான சாதனைகளையும், பழங்குடி மக்களின் நலனுக்காக நீண்டகால அரசியல் போராட்டத்தையும் முன்னெடுத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.