பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸின் அடுத்தடுத்த அதிரடி மாற்றங்களால் தமிழக அரசியல் களம் தற்போது பெரும் பரபரப்பில் ஆழ்ந்துள்ளது.
கடந்த வாரம் தொண்டர்களுக்கு எழுதிய கடிதத்தில், “நமக்கான வாகனம் இதோ அருகில் வந்துவிட்டது, அதில்தான் நாம் பயணிக்கப் போகிறோம்” என்று குறிப்பிட்டு கூட்டணி உறுதியாகிவிட்டதை சூசகமாகத் தெரிவித்திருந்தார். இதனால் அதிமுக அல்லது தவெக-வுடன் கூட்டணி முடிவாகிவிட்டதாகக் கருதப்பட்ட நிலையில், தற்போது வரை யாருடனும் கூட்டணி அமைக்கவில்லை என்று கூறி மீண்டும் ஒரு அதிரடித் திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளார்.
அதிமுக அல்லது தமிழக வெற்றிக் கழகம் ஆகிய இரு கட்சிகளில் யாருடன் கூட்டணி என்பது இன்னும் மூன்று நாட்களில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்றும் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இதனால் பாமக எந்தப் பக்கம் சாயப்போகிறது என்கிற எதிர்பார்ப்பு அரசியல் வட்டாரத்தில் அதிகரித்துள்ளது. தொகுதிப் பங்கீடு மற்றும் நிபந்தனைகள் குறித்த பேச்சுவார்த்தையில் இழுபறி நீடிப்பதால், இறுதி முடிவை எடுப்பதில் ராமதாஸ் நிதானம் காட்டி வருவதாகக் கூறப்படுகிறது.
