நூற்றாண்டு காலத்தில் மிக உயர்வான சுங்க வரி: அமெரிக்கா

ஆக்ஸ்ட் 7ஆம் நாள் முதல், அமெரிக்க அரசின் புதிய பரஸ்பர சுங்க வரி எனும் கொள்கை அதிகாரப்பூர்வமாக நடைமுறைக்கு வந்தது.

இதன் அடிப்படையில் உலகில் உள்ள 69 நாடுகள் மற்றும் பிரதேசங்கள் மீது 10 விழுக்காடு முதல் 41 விழுக்காடு வரையிலான சுங்க வரி வசூலிக்கப்படும். புதிய மதிப்பீடுகளின்படி, அமெரிக்க அரசின் இத்தகைய சராசரியான சுங்க வரி விகிதம் 18.3 விழுக்காட்டை எட்டியுள்ளது.

இது, கடந்த நூற்றாண்டு கால வரலாற்றில் இல்லாத அளவு அதிகமாகும். அமெரிக்க அரசின் வர்த்தகப் பாதுகாப்புவாதம் மேலும் தீவிரமாகி வருவதை அமெரிக்காவின் இக்கொள்கையின் நடைமுறையாக்கம் வெளிக்காட்டியுள்ளது. இது, உலகப் பொருளாதாரத்திற்குப் பாதிப்புகளைக் கொண்டு வருவதோடு, அமெரிக்கப் பொருளாதாரம் கடினமான நிலையில் சிக்கிக் கொள்வதற்குரிய சாத்தியத்தை ஏற்படுத்தும் என்று பொதுவாகக் கருதப்படுகிறது.

 

அனைத்து வர்த்தகக் கூட்டாளிகளும் மீது 10 விழுக்காட்டு சுங்க வரி விதிக்கவுள்ளதாக  இவ்வாண்டின் ஏப்ரல் திங்களில், அமெரிக்க அரசு அறிவித்தது. இந்த அறிவிப்பானது வர்த்தகப் பற்றாக்குறை வாய்ந்த நாடுகள் மீது தொடர்ந்து நிர்ப்பந்தத்தைத் திணிக்கும் நடவடிக்கையாகும். பல சுற்று பேச்சுவார்த்தைகளுக்குப் பின், ஆகஸ்ட் 7ஆம் நாள் அமெரிக்கா இக்கொள்கையை அதிகாரப்பூர்வமாக நடைமுறைப்படுத்த முடிவு செய்துள்ளது. இக்கொள்கையிலிருந்து அமெரிக்கா நலன்களைப் பெற முடியுமா இல்லையா என்பது தான் தற்போது இருக்கும் ஒரே கேள்வி. அமெரிக்காவின் சுங்க வரி  ஆதிக்கத்திற்கு எதிரான போராட்டத்தில், சில நாடுகள் எதிர் நடவடிக்கைகளை மேற்கொண்டால், அமெரிக்கா தன் நாட்டில் உற்பத்தியாகும் பல உற்பத்திப் பொருட்களை ஏற்றுமதி செய்ய முடியாது. இதனால், அமெரிக்காவின் பல நிறுவனங்கள் மாபெரும் இழப்புகளை சந்திக்க நேரிடும். தொழில் துறை மற்றும் வினியோகச் சங்கிலி துண்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அமெரிக்க மக்கள் பொருட்களின் விலை உயர்வு மற்றும் பணவீக்கம் போன்ற நெருக்கடியை உறுதியாக எதிர்நோக்க வேண்டியிருக்கும்.

Please follow and like us:

You May Also Like

More From Author