தமிழகத்தில் இன்று 10 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடிய வாய்ப்பு காணப்படுவதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென்னிந்திய மாநிலங்களுக்கு மேலாக ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காணப்படுவதால், இன்று தமிழகத்தில் வட மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில், தென் மாவட்டங்களில் சில இடங்களில், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இடியுடன் கூடிய மிதமான மழை மற்றும் மணிக்கு 40 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீச வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.
இந்நிலை ஜூன் 16 வரை நீடிக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கடலூர், அரியலூர் மற்றும் மயிலாடுதுறை ஆகிய 10 மாவட்டங்களிலும் புதுச்சேரியிலும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது.
தமிழகத்தில் 10 மாவட்டங்களில் இன்று கனமழை எச்சரிக்கை
