சீன ஊடகக் குழுமத்தின் ஆசியா மற்றும் ஆப்பிரிக்காவுக்கான மையம், சீன கம்யூனிஸ்ட் கட்சி சி சாங் தன்னாட்சிப் பிரதேசத்தின் கமிட்டியின் பிரச்சார பணியகம், சி சாங் வானொலி மற்றும் தொலைக்காட்சி நிலையம், சீன ரயில் குழுமத்தின் சிங் சாங் நிறுவனம் ஆகியவற்றுடன் இணைந்து, இந்தியா, நேபாளம், வங்காளதேசம், கம்போடியா, மங்கோலியா ஆகிய அண்டை நாடுகளைச் சேர்ந்த 20க்கும் மேற்பட்ட செய்தி ஊடக வியளாலர்களையும் புகழ் பெற்ற இணைய பிரபலங்களையும் நவீனமயமான சி சாங்கிற்கு அழைத்து, கூட்டு நிகழ்ச்சி தயாரிப்பு மேற்கொள்ளப்பட்டது. அடுத்த இரு வாரங்களில், இந்த பேட்டிக் குழு, லாசா, ரிகாசே, லின்ச்சீ, ஆலி முதலிய பிரதேசங்களுக்குச் சென்று, கடந்த 60 ஆண்டுகளில் சி சாங்கில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்களைப் பதிவு செய்து பேட்டி காண உள்ளனர்.
சீன ஊடகக் குழுமத்தின் சி ஜி டி என் நிறுவனத்தின் நிரந்தர துணை தலைமை பதிபாசிரியரும் ஆசியா மற்றும் ஆபிரிக்காவுக்கான மையத்தின் தலைவருமான அன் சியாவ்யூ கூறுகையில்,
தற்போதைய உலகம் பெருமளவில் மாறி வருகின்றது. பொருளாதார நிலைமை சரிவடைந்து, அடிக்கடி மோதல்கள் நிகழ்ந்தன. சர்வதேச ஊடக துறையில், அவதூறுகள் மற்றும் தவறான எண்ணங்கள் அதிகமாக இருக்கின்றன. இந்த சூழலில் உண்மையான செய்திகளுக்கான தேவை அதிகரித்துள்ளது. எல்லை கடந்த புரிந்துணர்வு மற்றும் உரையாடல் தேவை. இந்த கூட்டு பேட்டி பயணத்தின் மூலம், செய்தி ஊடகங்கள் பரிமாற்றம் மேற்கொண்ட மேடையை உருவாக்க விரும்புகிறோம். பல்வேறு நாடுகளைச் சேர்ந்த செய்தி ஊடக நண்பர்கள், சி சாங்கின் முன்னேற்றங்களைப் பார்வையிட்டு, நவீனமயமாக்கத்தை நனவாக்கும் வழிமுறை பற்றி விவாதிப்பதாக கூறினார்