2025 உலக ரோபோ மாநாடு 8ஆம் நாள் பெய்ஜிங் மாநகரில் துவங்கியது. பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 50 மனித உருவ ரோபோ உற்பத்தி நிறுவனங்கள் உள்ளிட்ட 200க்கும் அதிகமான நிறுவனங்கள் இதில் கலந்து கொண்டுள்ளன.
மாநாட்டின் போது, உலகளவில் 400க்கும் அதிகமான தலைசிறந்த அறிவியலாளர்கள், சர்வதேச அமைப்புகளின் பிரதிநிதிகள், தொழில் முனைவோர்கள் ஆகியோர் ரோபோ தொழிலின் வளர்ச்சிப் போக்கு, நடைமுறைப் பயன்பாடுகள், புத்தாக்கச் சாதனைகள் முதலியவை பற்றிப் பரிமாற்றம் மேற்கொள்வர். சுமார் 1500 ரோபோ தயாரிப்புகள் காட்சிப்படுத்தப்படுகின்றன. இவற்றில் 100க்கும் அதிகமானவை முதன்முறையாகப் பொது மக்களுக்கு அறிமுகப்படுத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.
தொழிற்துறை ரோபோ துறையில் சீனா தொடர்ந்து 12ஆவது ஆண்டாக உலகளவில் மிகப் பெரிய சந்தையாகத் திகழ்ந்து வருகின்றது. அதேவேளையில் சீனா உலகின் மிகப் பெரிய ரோபோ தயாரிப்பு நாடாகவும் விளங்கி வருவது குறிப்பிடத்தக்கது.