தூய்மைப் பணியாளர்களின் வாழ்வை மேம்படுத்துவதற்கான ஒரு குறிப்பிடத்தக்க நடவடிக்கையாக, அவர்களின் உடல்நலம், நிதிப் பாதுகாப்பு மற்றும் எதிர்கால வாய்ப்புகளை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட ஆறு புதிய நலத்திட்டங்களை தமிழக அரசு அறிவித்துள்ளது.
முன்னதாக, சென்னையில் தூய்மைப் பணியாளர்கள் பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தி வந்த நிலையில், அவர்களை நள்ளிரவில் குண்டுக்கட்டாக அங்கிருந்து காவல்துறை அகற்றியது.
நீதிமன்ற உத்தரவின்படி இது மேற்கொள்ளப்பட்டதாக கூறப்பட்டாலும், தூய்மைப் பணியாளர்களை நள்ளிரவில் கைது செய்து அகற்றியது மக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில், தூய்மைப் பணியாளர்களுக்கு புதிய நலத்திட்டங்களை தமிழக அரசு அறிவித்துள்ளது.
தூய்மைப் பணியாளர்களுக்கு ஆறு புதிய நலத்திட்டங்களை அறிவித்தது தமிழக அரசு
