இவ்வாண்டின் முதல் 7 திங்களில் சீனாவின் அஞ்சல் துறையில் அனுப்பப்பட்ட பொதிகளின் எண்ணிக்கை, 12ஆயிரத்து 230 கோடியை எட்டி, கடந்த ஆண்டின் இதே காலத்தில் இருந்ததை விட 16.2 விழுக்காடு அதிகரித்தது.
இவற்றில் அனுப்பப்பட்ட தூதஞ்சல் பொதிகளின் எண்ணிக்கை, 11 ஆயிரத்து 205 கோடியை எட்டி, கடந்த ஆண்டின் இதே காலத்தில் இருந்ததை விட 18.7 விழுக்காடு அதிகம் என்று தேசிய அஞ்சல் பணியகம் 14ம் நாள் தெரிவித்தது.
இக்காலக்கட்டத்தில், அஞ்சல் துறையின் மொத்த வருமானம், 1 இலட்சத்து 1807 கோடி யுவானை எட்டி, கடந்த ஆண்டின் இதே காலத்தில் இருந்ததை விட 8.3 விழுக்காடு அதிகரித்தது. இதில் தூதஞ்சல் அலுவலின் வருமானம், 83ஆயிரத்து 942 கோடி யுவானை எட்டி, கடந்த ஆண்டின் இதே காலத்தில் இருந்ததை விட 9.9 விழுக்காடு அதிகரித்தது என்று தெரிவிக்கப்பட்டது.
படம்:VCG
