சீன மக்கள் அரசியல் கலந்தாய்வு மாநாட்டின் 14ஆவது தேசிய கமிட்டியின் 3ஆவது கூட்டத்தொடர் பற்றிய செய்தியாளர் கூட்டம் மார்ச் 3ஆம் நாள் பிற்பகல் 3 மணிக்கு பெய்ஜிங் மக்கள் மாமண்டபத்தில் நடைபெறவுள்ளது. இக்கூட்டத்தொடரின் செய்தித் தொடர்பாளர் லியூ ஜியேயீ தொடர்புடைய தகவல்களை அறிமுகப்படுத்தவுள்ளார். அப்போது, சீன ஊடகக் குழுமம் நேரலை வழங்கவுள்ளது.
மேலும், 14ஆவது சீனத் தேசிய மக்கள் பேரவையின் 3ஆவது கூட்டத்தொடர் பற்றிய செய்தியாளர் கூட்டம் மார்ச் 4ஆம் நாள் நண்பகல் 12 மணிக்கு பெய்ஜிங் மக்கள் மாமண்டபத்தில் நடைபெறவுள்ளது. அப்போது இக்கூட்டத்தொடரின் செய்தித் தொடர்பாளர் செய்தியாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளிக்கவுள்ளார்.