மருது பாண்டியர் மற்றும் தேவர் குருபூஜையை முன்னிட்டு, அக்டோபர் 27 மற்றும் 30-ஆம் தேதிகளில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை வழங்கப்படுவதாக சிவகங்கை மாவட்ட ஆட்சித்தலைவர் பொற்கொடி அறிவித்துள்ளார்.
இதன்படி, சிவகங்கை, திருப்புவனம், மானாமதுரை, காளையார்கோவில், திருப்பத்தூர், இளையான்குடி, தேவக்கோட்டை ஆகிய பகுதிகளில் உள்ள அனைத்து பள்ளிகளும் மற்றும் கல்லூரிகளும் தற்காலிகமாக மூடப்படும். இதனுடன், திருச்செந்தூர் சூரசம்ஹார விழாவையொட்டி, அக்டோபர் 27-ஆம் தேதி தூத்துக்குடி மாவட்டத்திற்கும் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. பள்ளி குழந்தைகள் மற்றும் மாணவர்களுக்கு இந்த விடுமுறை சிறிய ஓய்வாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
