தெளிவான நீரும் பசுமையான மலையும் விலைமதிப்பற்ற சொத்துக்களாகும் என்ற இரு மலைகள் கோட்பாடு பற்றியும் உயிரினச் சுற்றுச்சூழலுக்கான சீனாவின் நடவடிக்கைகள் குறித்த கருத்துக் கணிப்பு உலகின் முக்கிய வளர்ர்ந்த நாடுகள் மற்றும் தெற்குலக நாடுகளில் நடத்தப்பட்டது.
மாசுபாட்டிற்கு பின்னர் தான், அதனைக் கட்டுப்படுத்துவதென்ற பாரம்பரிய வளர்ச்சி முறையை இரு மலைகள் கோட்பாடு உடைத்துள்ளதாக இக்கணிப்பில் பங்கேற்ற 81.6விழுக்காட்டவர் கருத்து தெரிவித்தனர். மேலும், இக்கருத்து தெற்குலக நாடுகளில் பெரிதும் பாராட்டப்பட்டுள்ளது என்று கணிப்பின் முடிவில் காட்டுகிறது.
சீனாவின் பசுமை வளர்ச்சிக்கான நடவடிக்கைகளில், எரியாற்றல் கட்டுகோப்பு மாற்றம், எரியாற்றல் சிக்கனம் மற்றும் பசுங்கூட வாயு வெளியேற்ற குறைப்பு, காடு வளர்ப்பு ஆகிய மூன்று துறைகள் குறித்து, முறையே 73.8விழுக்காடு, 73.2விழுக்காடு மற்றும் 68விழுக்காட்டவர்கள் பெரும் அங்கீகாரம் தெரிவித்தனர்.
மேலும், எரியாற்றல் சிக்கனம் மற்றும் வெளியேற்ற குறைப்பில் சீனா பிற நாடுகளுக்குப் பயனுள்ள அனுபவங்களை வழங்கியுள்ளதாக 79.9விழுக்காட்டவர் பாராட்டினர்.
உலக காலநிலை மற்றும் உயிரினச் சுற்றுச்சூவல் மேலாண்மையில் சீனா முக்கிய பங்காற்றுபவராக விளங்கியதாக 49.7விழுக்காட்டவர் மதிப்பிட்டார்.