இஸ்ரேலிய விமானப்படை ஈரானுக்குள் ஒரு தாக்குதலை நடத்தியுள்ளது. இது மத்திய கிழக்கு பகுதிகளில் மேலும் பதட்டங்களை அதிகரித்துள்ளது.
இந்த தாக்குதல், இஸ்ரேலின் மிகவும் வலிமையான எதிரியாக கருதப்படும் ஈரானின் மீதான நேரடித் தாக்குதலையும் குறிக்கிறது.
வெள்ளிக்கிழமை அதிகாலையில் தெஹ்ரானின் வடகிழக்கில் குண்டுவெடிப்புகள் ஏற்பட்டதாக ஈரானிய அரசு நடத்தும் நூர் நியூஸ் உறுதிப்படுத்தியது.
விமானப்படை தாக்குதல்கள், டஜன் கணக்கான அணு மற்றும் இராணுவ தளங்களை குறிவைத்ததாக இஸ்ரேலிய இராணுவ அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
அதே நேரத்தில், “ஈரானில் இஸ்ரேல் தாக்குதல்களை நடத்தியது” என்பதை இரண்டு அமெரிக்க அதிகாரிகள் ராய்ட்டர்ஸிடம் உறுதிப்படுத்தினர்.
மேலும் “அமெரிக்காவின் ஈடுபாடோ உதவியோ இல்லை” என்றும் அவர்கள் சுட்டிக்காட்டினர்.
ஈரான் மீது விமான தாக்குதல் நடத்திய இஸ்ரேல்; தலைநகர் தெஹ்ரானில் குண்டுவெடிப்புகள்
