79வது சுதந்திர தினத்தை முன்னிட்டு பிரதமர் மோடி நாட்டு டெல்லி செங்கோட்டையில் கொடியேற்றினார்.
அதன் பிறகு, நாட்டு மக்களுக்கு உரை நிகழ்த்தினார். பிரதமர் மோடி உரையின் முக்கிய அம்சங்கள் பின்வருமாறு:-
இந்த சுதந்திர தினம் நம்பிக்கை மற்றும் அபிலாஷைகளின் பண்டிகை என பிரதமர் கூறினார்.
சியாமா பிரசாத் முகர்ஜிக்கு அஞ்சலி செலுத்திய மோடி, ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்டிருந்த 370வது பிரிவை ரத்து செய்ததற்காக அவரது அரசாங்கத்தைப் பாராட்டினார்.
பிரதமர் மோடி தனது உரையில், ஆபரேஷன் சிந்தூரின் வெற்றிக்காக இந்திய ஆயுதப் படைகளைப் பாராட்டினார்.
மேலும், பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்திய அவர், ஆபரேஷன் சிந்தூரில் ஆயுதப் படைகளுக்கு முழு சுதந்திரம் அளித்ததாகத் தெரிவித்தார்.
சுதந்திர தினம் 2025: பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு உரை
