7ஆவது பெய்ஜிங் பன்னாட்டுத் திபெத்தியல் கருத்தரங்கில் திபெத் கல்வி வளர்ச்சி குறித்த சர்வதேசக் கூட்டம் 28 ஆம் நாள் நடைபெற்றது.
உள்நாட்டு மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த 60க்கும் மேற்பட்ட நிபுணர்கள் மற்றும் அறிஞர்கள் நேரடியாகவும் இணையவழியிலும் இதில் கலந்து கொண்டனர்.
இதில், திபெத்தில் கல்வி பிரச்சினை குறித்து, நவீன கல்வி அமைப்பு முறையை நிறுவுவது, திபெத்தின் சிறந்த பாரம்பரிய பண்பாட்டைப் பரவல் செய்வது, திபெத்திய மருத்துவக் கல்வியின் வளர்ச்சி முதலியவை பற்றி அவர்கள் கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டனர்.