செங்கோட்டையில் தனது 79வது சுதந்திர தின உரையின் போது, பிரதமர் நரேந்திர மோடி அரசியல் விஷயங்கள் மட்டுமல்லாது வளர்ந்து வரும் சுகாதார நெருக்கடிக்கு காரணமாக இருக்கும் உடல் பருமன் குறித்தும் பேசினார்.
100 நிமிடங்களுக்கும் மேலாக நாட்டு மக்களுக்கு உரையாற்றிய அவர், வாழ்க்கை முறை மாற்றங்கள், மோசமான உணவுமுறை மற்றும் உட்கார்ந்தே வேலை செய்யும் பழக்கவழக்கங்கள் நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம் மற்றும் இதய நோய்கள் போன்ற தொற்றாத நோய்களின் அதிகரிப்பிற்கு உந்துதலாக இருப்பதாக எச்சரித்தார்.
உடல் பருமனை ஒரு சவாலாக குறிப்பிட்ட பிரதமர் மோடி, ஒரு நேரடியான நடவடிக்கையை முன்மொழிந்தார். அதாவது வீட்டு சமையல் எண்ணெய் பயன்பாட்டை 10% குறைக்க அறிவுறுத்தினார்.
சமையல் எண்ணெய் பயன்பாட்டை 10% குறைக்க பிரதமர் மோடி அறிவுறுத்தல்
