நான்ஜிங் படுகொலையில் மரணமடைந்தோருக்கான 2024ஆம் ஆண்டு தேசிய நினைவேந்தல் நிகழ்வை, சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியும், அரசவையும் டிசம்பர் 13ஆம் நாள் முற்பகல் நடத்தின.
சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் அரசியல் குழுவின் உறுப்பினரும், பரப்புரைத் துறைத் தலைவருமான லீ ஷுலெய் இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரை நிகழ்த்தினார்.
அவர் கூறுகையில், இன்று, நாங்கள் ஒன்றுகூடியிருப்பது, நான்ஜிங் படுகொலையில் மரணமடைந்தோரை ஆழமாக நினைவுகூர்வதோடு, அமைதியான வளர்ச்சிப் பாதையில் சீன மக்கள் ஊன்றி நிற்கின்ற விருப்பத்தை வெளிப்படுத்தியுள்ளது என்றார்.
மேலும், சீன நவீனமயமாக்கத்தின் மூலம், வல்லரசு கட்டுமானம் மற்றும் தேசத்தின் மறுமலர்ச்சியை முன்னேற்றுவதற்கு முயற்சிகளை மேற்கொண்டு, மனித குலத்தின் அமைதி மற்றும் வளர்ச்சி என்ற உன்னத லட்சியத்துக்கு மேலதிக பங்காற்ற வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.