48வது உலக திறன் போட்டி ஷாங்காயில் நிறைவு

Estimated read time 1 min read

 

சீனாவின் ஷாங்காய் மாநகரில் நடைபெற்ற 48வது உலக திறன் போட்டி 27ஆம் நாளிரவு நிறைவடைந்தது.

இதன் நிறைவு விழாவில், 64 போட்டி நிகழ்ச்சிகளில் பதக்கம் வென்றவர்களும், 68 பிரதிநிதிக் குழுக்களின் மிக சிறந்த போட்டியாளர்களின் பட்டியலும் வெளியிடப்பட்டன. அனைத்து போட்டி நிகழ்ச்சிகளிலும் பங்கேற்ற சீனப் பிரதிநிதிக் குழு, 41 தங்கப் பதக்கங்கள், 11 வெள்ளிப் பதக்கங்கள், 4 வெண்கலப் பதக்கங்கள் மற்றும் 6 சிறந்த செயல்திறன் விருதுகளை வென்றுள்ளதோடு, தங்கப் பதக்கங்களின் எண்ணிக்கை, மொத்தப் பதக்கங்களின் எண்ணிக்கை, ஒட்டுமொத்தக் குழு மதிப்பெண்கள் ஆகியவற்றில் முதலிடம் பிடித்தது. இது, இப்போட்டியில் சீனா பங்கேற்றதிலிருந்து புதிய சாதனையைப் படைத்துள்ளது.

இந்த நிறைவு விழாவில், அடுத்த போட்டியை நடத்தும் தரப்பிடம் கொடி ஒப்படைப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. 49வது உலக திறன் போட்டி 2028ஆம் ஆண்டில் ஜப்பானின் ஐச்சி மாநிலத்தில் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

 

You May Also Like

More From Author