டெல்லி : வாக்குத் திருட்டு, பீகார் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் விவகாரங்கள் நாடு முழுவதும் பூதாகரமாக வெடித்துள்ள நிலையில், டெல்லியில் உள்ள தேசிய ஊடக மையத்தில் தலைமை தேர்தல் ஆணையம் நாளை பிற்பகல் 3 மணிக்கு செய்தியாளர் சந்திக்க உள்ளது.
இந்த செய்தியாளர்கள் சந்திப்பில் பிஹார் சட்டமன்றத் தேர்தல் அட்டவணை வெளியாகும் எனவும் தேர்தல் ஆணையத்தின் மீதான புகார்களுக்கு விளக்கம் அளிக்கப்படும் எனவும் எதிர்பார்ப்பு உள்ளது.
இந்த செய்தியாளர் சந்திப்பு, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி எழுப்பிய வாக்கு திருட்டு குற்றச்சாட்டுகள் மற்றும் பீகார் மாநிலத்தில் நடைபெறும் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தம் தொடர்பான விவகாரங்களைப் பற்றி விளக்குவதற்காக இருக்கலாம்.
மேலும், இந்த சந்திப்பில் தலைமை தேர்தல் ஆணையர் க்யானேஷ் குமார் மற்றும் மற்ற தேர்தல் ஆணையர்கள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே, பீகார் SIR, வாக்குத் திருட்டு விவகாரங்களை மக்களிடம் கொண்டு செல்ல, ‘வாக்குரிமை யாத்திரை’ என்ற பெயரில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி நாளை பீகாரில் பயணத்தை தொடங்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.
