இனி 5 செகண்டில் கன்பார்ம் டிக்கெட்.. இந்திய ரயில்வேயின் மாஸ்டர் பிளான் ..!! 

Estimated read time 1 min read

இந்தியாவில் நாள்தோறும் சுமார் 2.3 கோடி மக்கள் இரயில்களில் பயணம் செய்யும் நிலையில், 1986-ம் ஆண்டு முதல் பயன்பாட்டில் இருக்கும் பழைய முன்பதிவு முறைக்கு (PRS) பதிலாக, 5 மடங்கு வேகமான புதிய தொழில்நுட்பம் அறிமுகமாகிறது.

தற்போதைய முறையில் நிமிடத்திற்கு 8 ஆயிரம் டிக்கெட்டுகள் மட்டுமே எடுக்க முடியும் என்பதால், தட்கல் நேரங்களில் செயலி முடங்குவது போன்ற சிக்கல்கள் நீடிக்கின்றன.

புதிய “கிளவுட்-நேட்டிவ்” தொழில்நுட்பத்தின் மூலம் நிமிடத்திற்கு 1.5 லட்சம் டிக்கெட்டுகள் வரை முன்பதிவு செய்ய முடியும். இதனால் 30 வினாடிகளாக இருக்கும் தட்கல் முன்பதிவு நேரம் வெறும் 3 முதல் 5 வினாடிகளாகக் குறையும்.

மேலும், “ரெயில்ஒன் சூப்பர் செயலி” (RailOne Super App) என்ற ஒரே தளத்தின் கீழ் டிக்கெட் முன்பதிவு, ரத்து செய்தல் மற்றும் பி.என்.ஆர் நிலை போன்ற அனைத்து சேவைகளும் ஒருங்கிணைக்கப்பட உள்ளன.

பாதுகாப்பை உறுதிப்படுத்த ஆதார் ஓ.டி.பி மற்றும் முக அங்கீகாரம் போன்ற வசதிகள் புகுத்தப்படுவதால், ஏஜெண்டுகளின் மோசடிகள் மற்றும் தட்கல் கருப்பு சந்தை முற்றிலுமாகத் தடுக்கப்படும். இதன் மூலம் இந்திய இரயில்வேக்கு ஆண்டுக்கு ரூ.60 ஆயிரம் கோடி வரை இழப்பு தவிர்க்கப்படுவதோடு, வருவாயும் அதிகரிக்கும்.

குறிப்பாக, பண்டிகை காலங்களில் ஏற்படும் கூட்ட நெரிசலைச் சமாளிக்கவும், எதிர்கால ஹைப்பர்லூப் இரயில் தேவைகளைப் பூர்த்தி செய்யவும் இந்த “6ஜி” வேகத்திலான தொழில்நுட்பம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

ஆதார் சரிபார்ப்பு செய்த பயனர்களுக்கு முன்னுரிமை அளிப்பதன் மூலம் உண்மையான பயணிகள் எளிதாக டிக்கெட் பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது, இது கோடிக்கணக்கான பயணிகளுக்கு ஒரு மிகப்பெரிய வரப்பிரசாதமாகும்.

Please follow and like us:

You May Also Like

More From Author