தொடர் சரிவில் தங்கம் விலை.. இன்று அதிரடியாக ரூ.320 சரிவு..

Estimated read time 1 min read

சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.320 குறைந்துள்ளது.

சர்வதேச சந்தை நிலவரங்கள், ரஷ்யா – உக்ரைன் போர் உள்ளிட்ட உலக நாடுகளில் நிகழும் அசாதாரண சூழல், டாலருக்கு நிகராண இந்தியா ரூபாயின் மதிப்பு ஆகியவை காரணமாக தங்கம் விலை அதிரடியாக ஏற்றம், இறக்கம் கண்டு வருகிறது.

அதிலும் தங்கம் சிறந்த சேமிப்பாகவும், சிறந்த முதலீடாகவும் பார்க்கப்படுவதால் இந்தியாவில் தங்கத்திற்கு எப்போதுமே மவுசு அதிகம் தான். தொடர்ந்து அதிரடியாக ஏற்றம் கண்டு வந்த தங்கம் விலை, உக்ரைன் போர் முடிவுக்கு வரும் சூழல் உருவாகி உள்ளதால் கடந்த சில நாட்களாகவே சர்வதேச சந்தையில் தங்கம் விலை சரிந்து வருகிறது.

அதன்படி , சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ. 320 குறைந்து ஒரு சவரன் ரூ.73,880க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல் ஆபரணத்தங்கம் கிராமுக்கு ரூ. 40 குறைந்து ஒரு கிராம் ரூ.9,235க்கு விற்கப்படுகிறது. சில்லறை வர்த்தகத்தில் வெள்ளிவிலை ஒரு கிராம் ரூ.126க்கு விற்பனையாகிறது.

You May Also Like

More From Author