கூகுளுக்குப் போட்டியாக ஒரு செயற்கை நுண்ணறிவு தேடுபொறியை உருவாக்கும் ஸ்டார்ட்அப் நிறுவனமான Perplexity நிறுவனம் ஊடக நிறுவனங்களுடனான விமர்சனங்கள் மற்றும் சட்டப் போராட்டங்களைத் தீர்க்க ஒரு முக்கிய முயற்சியை அறிவித்துள்ளது.
அதன்படி தங்கள் உள்ளடக்கத்தைப் பயன்படுத்துவதற்காக வெளியீட்டாளர்களுக்கு ஈடுசெய்யும் நோக்கில், $42.5 மில்லியன் நிதி ஆதரவுடன் ஒரு வருவாய்-பகிர்வு திட்டத்தை இந்த நிறுவனம் தொடங்கியுள்ளது.
செயற்கை நுண்ணறிவு இணையத்தை மேம்படுத்த உதவுகிறது என்றாலும், பதிப்பாளர்கள் பணம் பெற வேண்டியது அவசியம் என்று Perplexity தலைமைச் செயல் அதிகாரி அரவிந்த் ஸ்ரீனிவாஸ் தெரிவித்துள்ளார்.
சாட்ஜிபிடி மற்றும் கூகுளின் ஏஐ ஓவர்வியூஸ் போன்ற கருவிகள் மூலம் உருவாக்கப்படும் ஏஐ பதில்கள், ஊடகத் தளங்களுக்கான மதிப்புமிக்க வெப் டிராஃபிக்கை குறைத்துவிட்டதாக ஊடகத் துறையினர் அஞ்சுகின்றனர்.
ஊடக நிறுவனங்களுக்கு வருவாய் திட்டத்தை அறிவித்தது Perplexity AI
