சீனத் தலைமையமைச்சர் லீ ச்சியாங், ஐரோப்பிய கவுன்சில் தலைவர் சார்லஸ் மிஷெலுடன் ஜுன் 22ஆம் நாளிரவு பாரிஸில் சந்திப்பு நடத்தினார்.
லீ ச்சியாங் கூறுகையில், ஐரோப்பாவுடன் இணைந்து புதிய சுற்று சீன-ஐரோப்பியத் தலைவர்களின் சந்திப்பை ஏற்பாடு செய்து, பசுமை, பொருளாதாரம் மற்றும் வர்த்தகம், எண்ணியல் உள்ளிட்ட துறைகளில் ஒத்துழைப்புகளை வலுப்படுத்தி, சீன-ஐரோப்பிய உறவின் வளர்ச்சிக்குப் புதிய வாய்ப்புகளை வழங்கச் சீனா விரும்புகிறது என்றார்.
மேலும், சீனாவும் ஐரோப்பாவும் ஒரு தரப்பு மற்ற தரப்பின் வளர்ச்சியிலிருந்து நலன் பெற்று வருகின்றன. ஒன்றின் மீது ஒன்று நம்பிக்கையை வலுபடுத்தி, வெற்றிகரமான ஒத்துழைப்புகளின் மூலம் ஐயத்தை நீக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
ஒரே சீனா என்ற கோட்பாட்டில் ஐரோப்பிய ஒன்றியம் ஊன்றி நின்று வருகிறது. சீனாவுடன் தொடர்பு மற்றும் பரிமாற்றத்தை வலுபடுத்தி, பல நிலைகளிலான ஒத்துழைப்பு உறவை வளர்த்து, காலநிலை, சுகாதார மற்றும் ஆரோக்கியம் உள்ளிட்ட துறைகளிலுள்ள உலகளாவிய பிரச்சினைகளைத் தீர்த்து, திறந்த நிலை மற்றும் பல்துருவ நிலை உலகத்தை உருவாக்க விரும்புவதாக மிஷெல் தெரிவித்தார்.