உலகின் சக்திவாய்ந்த பாஸ்போர்ட்டை கொண்டுள்ள 6 நாடுகள் 

பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான், சிங்கப்பூர் மற்றும் ஸ்பெயின் ஆகிய நாடுகள் உலகின் சக்திவாய்ந்த பாஸ்போர்ட் டுகளைக் கொண்டுள்ளதாக ஹென்லி பாஸ்போர்ட் குறியீட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

194 உலக நாடுகளுக்கு விசா இல்லாத நுழைவை அனுமதித்து, இந்த நாடுகள் சமீபத்திய ஹென்லி பாஸ்போர்ட் குறியீட்டில் முதல் இடத்தைப் பிடித்துள்ளன.

இந்த நாடுகளைத் தொடர்ந்து பின்லாந்து, நெதர்லாந்து, தென் கொரியா மற்றும் ஸ்வீடன் ஆகியவை 193 நாடுகளுக்கு விசா இல்லாத அனுமதியை வழங்குகின்றன.

62 நாடுகளுக்கு விசா இல்லாதஅனுமதியை வழங்கி, இந்த குறியீட்டின் அடிப்படையில் இந்தியா 85 வது இடத்தில் உள்ளது

You May Also Like

More From Author