சிம்பு – வெற்றிமாறன் இணையும் படம் உறுதி; 15 நாட்களில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு?  

Estimated read time 1 min read

தமிழ் திரையுலகில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த நடிகர் சிம்பு மற்றும் இயக்குநர் வெற்றிமாறன் கூட்டணி உறுதியாகியுள்ளது.
தனது அடுத்த படம் குறித்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், வெற்றிமாறன் ஒரு நிகழ்ச்சியில் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
அதாவது இன்னும் 10 முதல் 15 நாட்களுக்குள் தனது அடுத்த படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என அவர் கூறியிருப்பது சிம்பு ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
‘STR 49’ என்ற தற்காலிகத் தலைப்புடன், கலைப்புலி தாணு தயாரிப்பில் சிம்பு – வெற்றிமாறன் கூட்டணியில் இந்தப் படம் உருவாக இருந்தது.
படத்திற்கான ப்ரோமோ ஷூட் கூட நடத்தப்பட்டது. ஆனால், ஜூலை மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட அறிவிப்பு, சில சிக்கல்கள் காரணமாகத் தாமதமானது.

You May Also Like

More From Author