சீனாவின் தியன் ஜின் மாநகரில் நடைபெற உள்ள ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சி மாநாட்டில் பங்கெடுக்க, பெலாரஸ் அரசுத் தலைவர் லுகாஷென்கோ அரசுத் தலைவர் பதவி ஏற்ற பின் தனது 16ஆவது சீனப் பயணத்தை தொடங்க உள்ளார்.
இதை முன்னிட்டு, அந்நாட்டு அரசுத் தலைவர் மாளிகையில் அரசுத் தலைவர் லுகாஷென்கோ சீன ஊடக குழுமத்தின் சி.ஜி.டி.என்.க்கு சிறப்புப் பேட்டி அளித்தார்.
2024ஆம் ஆண்டின் ஜுலை மாதத்தில், பெலாரஸ் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பில் அதிகாரப்பூர்வமாக சேர்ந்தது. அதற்கு முன், பெலாரஸ் 2009ஆம் ஆண்டில் இவ்வமைப்பின் பேச்சுவார்த்தை கூட்டாளியாகவும், 2015ஆம் ஆண்டில் இவ்வமைப்பின் பார்வையாளர் நாடாகவும் மாறியிருந்தது. ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் 10ஆவது உறுப்பு நாடாகியுள்ள பெலாரஸ் மொத்தம் 15ஆண்டுகளைக் கடந்துள்ளது.
இது குறித்து லுகாஷென்கோ கூறுகையில்,
ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பில் சேர்வது, பெலாரஸ் கண்ணியமான மற்றும் நன்கு பரிசீலிக்கப்பட்ட பின் எடுத்த தீர்வு ஆகும். உலக அரசியல் துறையில் இவ்வமைப்பின் பங்கு தொடர்ந்து வலுவடைந்து வருவதை கண்டோம். உலகளாவிய அறைக்கூவல்களைச் சமாளிப்பதற்கான சிறந்த தீர்வு, ஒற்றுமை தான் என்று தெரிவித்தார்.