காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலில் நடந்த மாவடி சேவை உற்சவத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
ஏகாம்பரநாதர் கோயிலில் கடந்த 23ஆம் தேதி பங்குனி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. நாள்தோறும் சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்ற நிலையில், விழாவின் 9ஆம் நாள் நிகழ்ச்சியாக மாவடி சேவை விமரிசையாக நடைபெற்றது.
பார்வதி தேவி மாமரத்தடியில் சிவனை பூஜித்த நிகழ்வை நினைவுப்படுத்தும் வகையில் நடந்த நிகழ்ச்சியில், ஏலவார்குழலி அம்பாளுடன் ஏகாம்பரநாதர் வெள்ளி மாவடி வாகனத்தில் எழுந்தருளி 4 ராஜ வீதிகளை வலம் வந்தார். இந்த நிகழ்வில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
