சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டியின் பொதுச் செயலாளரும், அரசுத் தலைவருமான ஷி ச்சின்பிங், ஜப்பானிய ஆக்கிரமிப்புக்கு எதிரான சீன மக்களின் எதிர்ப்புப் போர் மற்றும் உலக ஃபாசிச எதிர்ப்பு போர் வெற்றி பெற்றதன் 80வது ஆண்டு நிறைவுக்கான நினைவு மாநாட்டில் பங்கேற்க, சீனாவுக்கு வருகை தந்துள்ள வட கொரியத் தொழிலாளர் கட்சியின் மத்திய கமிட்டிப் பொதுச் செயலாளரும், தேசிய விவகாரத் தலைவருமான கிம் ஜோங்-உன்னைச் செப்டம்பர் 4ஆம் நாள் பெய்ஜிங் மாநகரில் சந்தித்து பேசினார்.
அப்போது ஷிச்சின்பிங் கூறுகையில்,
சீனாவும் வட கொரியாவும் அண்டை நாடுகள் மட்டுமல்ல, நல்ல நண்பர்களும் ஆகும் என்றார். மேலும், கம்யூனிஸ்ட் கட்சிகளின் தலைமையிலான சோஷலிசச் நாடாகவும் இரு நாடுகள் விளங்கி, கூட்டு நம்பிக்கை மற்றும் இலக்குகளைக் கொண்டுள்ளன. கிம் ஜோங்-உன் சீனாவுக்கு வருகை தந்து, 2ஆவது உலகப் போரின் வெற்றியின் சாதனைகளைப் பேணிக்காக்கும் மன உறுதியை வெளிப்படுத்தியுள்ளதோடு இரு நாடுகளும் கட்சிகளும் மேலும் சீரான ஒத்துழைப்பு உறவை வலுப்படுத்துவதற்குரிய முக்கிய வாய்ப்பாகவும் அமைந்துள்ளது என்றார்.
கிம் ஜோங்-உன் கூறுகையில், ஷிச்சின்பிங்கின் தலைமையில் புதிய யுகத்தில் ஷிச்சின்பிங்கின் சீனத் தனிச்சிறப்பியல்பு வாய்ந்த சோஷலிசச் சிந்தனை என்ற வழிகாட்டலின் அடிப்படையில், சீனா மாபெரும் சாதனைகளைப் பெற்றுள்ளது எனப் பாராட்டு தெரிவித்தார். அதோடு, சீனாவுடன் இணைந்து, இரு கட்சிகள் மற்றும் நாடுகளின் பல்வேறு நிலை பரிமாற்றங்களை விரிவாக்கி, கட்சிக் கட்டுமானம், பொருளாதார வளர்ச்சி போன்றவற்றின் அனுபவங்களைப் பரிமாறிக்கொண்டு, வட கொரியக் கட்சி மற்றும் நாட்டின் கட்டுமான இலட்சியத்தின் வளர்ச்சியை விரைவுபடுத்த வேண்டும் என விருப்பம் தெரிவித்ததோடு, இரு நாடுகளின் கூட்டு நலன் தரும் பொருளாதாரம் மற்றும் வர்த்தக ஒத்துழைப்புகளை மேலும் ஆழமாக்கி, மேலதிகமான சாதனைகளைப் பெற முயற்சி செய்ய வேண்டும் என்றும் கூறினார்.