சீன மக்களின் ஜப்பானிய ஆக்கிரமிப்பு எதிர்ப்புப் போர் மற்றும் உலகப் பாசிச எதிர்ப்புப் போர் வெற்றி பெற்ற 80ஆவது ஆண்டு நிறைவுக்கான நினைவுக் கூட்டத்தில் சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங் ஆற்றிய உரையில் பன்னாடுகளின் தலைவர்கள் கவனம் செலுத்தினர்.
சீனாவின் அமைதி நோக்கிலான வளர்ச்சிப் பாதையானது, சர்வதேச சமூகம் வரலாற்றிலிருந்து பாடத்தைக் கற்றுக்கொண்டு மனித குலத்தின் அமைதி மற்றும் வளர்ச்சி அடைவதற்கு வலுவான நம்பிக்கையையும் உரியாற்றலையும் வழங்கியுள்ளது என்று அவர்கள் குறிப்பிட்டனர்.
ரஷிய நாடாளுமன்றக் கீழவையின் முதன்மை துணைத் தலைவரும் ரஷிய-சீன நட்புறவுச் சங்கத்தின் தலைவருமான மெலினிகோவ் கூறுகையில், இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்ட பல்வேறு நாடுகளின் தலைவர்களும் ஒத்துழைப்பை, குறிப்பாகச் சமநிலையிலான நேர்மையான ஒத்துழைப்பை ஆதரிக்கின்றனர்.
அண்மையில் வெளியிடப்பட்ட தியேன்ச்சின் அறிக்கையின் எழுச்சிக்கு இது ஏற்றதாக உள்ளது என்றார்.