2023ஆம் ஆண்டு தேசிய நில தகுதி மாற்றம் கணக்கெடுப்பு முடிவுகளின் படி,நாட்டின் சாகுபடி நிலப்பரப்பு 12 கோடியே 86 இலட்சம் ஹெக்டராகும்.
இதில் சுமார் 7 இலட்சத்து 46 ஆயிரம் 933 ஹெக்டர் நிலப்பரப்பு அதிகரித்துள்ளது. ஹெய்லோங்ஜியாங், உள் மங்கோலியா, ஹெனான், ஜிலின், சின்ஜியாங் ஆகியவற்றின் சாகுபடி நிலப்பரப்பு 66 இலட்சத்து 66 ஆயிரம் 666 ஹெக்டரைத் தாண்டியுள்ளது.
சாகுபடி நிலத்தின் அமைப்பு முறை மேலும் மேம்படுத்தப்பட்டுள்ளது.
அதே வேளையில், தற்போது சீனாவில் சாகுபடி நிலங்களின் பரவல் அமைப்பு இன்னும் மேம்படுத்தப்பட வேண்டும்.
வடக்குப் பகுதியில் நீர் வளங்கள் குறைவாக உள்ளது. அளவு மீறிய சாகுபடி நீர் வளங்களைப் பயன்படுத்துவது சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கும் புதிய அறைகூவல்களை ஏற்படுத்தியுள்ளது..