குறைந்த கார்பன் மேம்பாடு குறித்த வெள்ளை அறிக்கையை சீனா வெளியிட்டது

Estimated read time 0 min read

“கார்பன் உச்ச நிலை மற்றும் கார்பன் நடுநிலை: சீனாவின் திட்டங்கள் மற்றும் தீர்வுகள்” என்ற தலைப்பிலான வெள்ளை அறிக்கையை சீன அரசவையின் தகவல் தொடர்பு பணியகம் நவம்பர் 8ஆம் நாள் சனிக்கிழமையன்று வெளியிட்டது.

இதில் கடந்த ஐந்து ஆண்டுகளில் கார்பன் உச்சநிலை மற்றும் நடுநிலைத்துறைகளில் சீனாவின் முக்கிய சாதனைகள் பற்றி தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதில் சீனாவின் அணுகுமுறைகள், நடவடிக்கைகள் மற்றும் அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டுள்ளது.

உலகளவில் மிகவும் முறையான மற்றும் விரிவான கார்பன் வெளியேற்ற குறைப்பு கொள்கை கட்டமைப்பை சீனா நிறுவியுள்ளது. மிகப்பெரிய மற்றும் வேகமாக வளர்ந்து வரும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைப்புமுறையும், மிகப்பெரிய மற்றும் முழுமையான புதிய எரிசக்தி தொழில்துறை சங்கிலியையும் சீனா உருவாக்கியுள்ளது. உலகில் புதிய எரிசக்தி வாகனங்களின் பயன்பாட்டை மிகப்பெரிய மற்றும் வேகமான ஊக்குவிப்பு அடைந்துள்ள நிலைமை சீனாவில் உருவாக்கப்பட்டுள்ளது.

உலகளவில் புதிதாக சேர்க்கப்பட்ட பசுமைப் பகுதிகளில் சீனா நான்கில் ஒரு பங்கு வகிக்கிறது. சக்தி நுகர்வு தீவிரத்தில் வேகமாக சரிவு உள்ள நாடுகளில் சீனா ஒன்றாக உள்ளது என்று இந்த வெள்ளை அறிக்கையில் கூறப்படுகின்றது.

மேலும், கார்பன் வெளியேற்றத்துக்கான முதன்மை ஆதாரம் ஆற்றல் நுகர்வு ஆகும் என்றும், கார்பன் உச்சநிலை மற்றும் நடுநிலையின் இலக்குகளை அடைவதற்கு பசுமை மற்றும் குறைந்த கார்பன் ஆற்றலாக மாறுவது முக்கியமானது என்றும் இவ்வறிக்கையில் எடுத்துக்காட்டப்பட்டுள்ளது. நாட்டின் அடிப்படை யதார்த்தம் மற்றும் வளர்ச்சி நிலைக்கு இணங்க, எரிசக்தி பாதுகாப்பை உறுதி செய்வதை நிபந்தனையாக கொண்டு, சீனா புதைபடிவ எரிபொருட்களை புதுப்பிக்கத்தக்க எரிசக்தியாக மாற்றுவதற்கு வலிமையான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. புதிய ஆற்றல் மற்றும் மின் அமைப்புமுறையை ஊக்குவித்து, கார்பன் வெளியேற்ற குறைப்பு உள்ளிட்ட இலக்குகளை அடைவதை ஆதரித்து வருகின்றது என்று இவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.

Please follow and like us:

You May Also Like

More From Author