சென்னையில் கடந்த 6-ந்தேதி ஒரு கிராம் ரூ.10,005 என்ற புதிய உச்சத்தை அடைந்தது. அதாவது ஒரு சவரன் தங்கம் விலை ரூ.80 ஆயிரத்து 40-க்கு விற்பனையானது. இது இல்லத்தரசிகளை அதிர்ச்சி அடைய வைத்தது. நேற்று முன்தினம் விடுமுறை தினம் என்பதால் அதே விலை நீடித்தது. நேற்று காலையில் தங்கம் விலை சற்று குறைந்தது. அதாவது கிராமுக்கு ரூ.35 குறைந்து ரூ.9,970-க்கும், சவரனுக்கு ரூ.280 குறைந்து சவரன் ரூ.79 ஆயிரத்து 760-க்கு விற்பனை செய்யப்பட்டது.
நேற்று மாலை தங்கம் விலை மீண்டும் புதிய உச்சத்தை தொட்டது. கிராமுக்கு ரூ.90-ம்,சவரனுக்கு ரூ.720-ம் அதிகரித்தது. அதன்படி ஒரு கிராம் ரூ.10 ஆயிரத்து 60-க்கும், சவரன் ரூ.80 ஆயிரத்து 480-க்கும் விற்பனையானது.
இந்த நிலையில், சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று வரலாறு காணாத புதிய உச்சத்தை தொட்டுள்ளது. அதன்படி, கிராமுக்கு ரூ. 90 உயர்ந்து ஒரு கிராம் ரூ.10,150-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சவரனுக்கு ரூ.720 உயர்ந்து ஒரு சவரன் ரூ.81,200-க்கு விற்பனையாகிறது.
வெள்ளிவிலையில் இன்று மாற்றமின்றி, ஒரு கிராம் வெள்ளி ரூ.140-க்கும், கிலோ ரூ.1 லட்சத்து 40 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
தங்கம், வெள்ளி விலை தொடர்ந்து அதிகரிக்கக்கூடும் என்று வியாபாரிகள் கருத்து தெரிவித்து உள்ளனர். தங்கம் விலை உயர்வு நடுத்தர மக்களையும், இல்லத்தரசிகளையும் கலக்கத்தில் ஆழ்த்தி உள்ளது.
அதிமுகவில் இருந்து தவெகவிற்கு வருவதற்கு இன்னும் 10, 20 பேர் தயார் நிலையில் இருக்கிறார்கள் என்று தவெக அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளது அரசியல் களத்தில் [மேலும்…]
நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் ‘ஜெயிலர் 2’ திரைப்படத்தில், ‘போதி’ என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ள நடிகர் எஸ்.ஜே.சூர்யாவின் அறிமுக வீடியோவை [மேலும்…]
2026-27-ஆம் ஆண்டில் மிகவும் சக்திவாய்ந்த ‘சூப்பர் எல் நினோ’ காலநிலை மாற்றம் ஏற்படக்கூடும் என்று இந்தியாவில் உள்ள 180-க்கும் மேற்பட்ட சுற்றுச்சூழல் மற்றும் வானிலை [மேலும்…]
மழைக்காலங்களில் தேங்கும் தூய்மையான தண்ணீரில் உருவாகும் ‘ஏடிஸ்’ வகை கொசுக்கள் மூலம் டெங்கு பரவுகிறது. பருவநிலை மாற்றம் காரணமாக, பருவமழைக்கு முன்னரே டெங்கு பாதிப்பு [மேலும்…]
நாடு முழுவதும் 51 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இளைஞர்களுக்கு அரசு பணிக்கான நியமன ஆணைகளை பிரதமர் மோடி காணொலி வாயிலாக வழங்கினார். மத்திய அரசின் ரயில்வே, [மேலும்…]
புரட்டாசி மாதம் என்றாலே திருமாலின் அருளையும், திருவேங்கடவனின் ஆசிகளையும் பெற மக்கள் பெருமாள் கோவில்களுக்குச் சென்று வழிபடுவது வழக்கம். பெருமாளைப் போற்றிப் பாடும் பல [மேலும்…]
மஹாலட்சுமி விரதம், லட்சுமி தேவியின் அருளையும் செல்வம் மற்றும் வளத்தையும் வேண்டி கடைப்பிடிக்கப்படும் முக்கியமான விரதமாகக் கருதப்படுகிறது. இந்த விரதம் பொதுவாக பாத்ரபத மாத [மேலும்…]