புருனை 42ஆவது தேசிய தினத்துக்கு ஷிச்சின்பிங் வாழ்த்து

புருனையின் 42ஆவது தேசிய தினத்தை முன்னிட்டு, சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் 23ஆம் நாள் புருனை சுல்தான் ஹசனலுக்கு வாழ்த்து செய்தி அனுப்பி புருனை சுதந்திரம் பெற்ற 42ஆவது ஆண்டு நிறைவு குறித்து வாழ்த்து தெரிவித்தார்.

அதில் ஷிச்சின்பிங் கூறுகையில், சீனா மற்றும் புருனை இடையே ஆழமான பாரம்பரிய நட்புறவு உள்ளது. கடந்த ஆண்டில் புருனை சுல்தான் ஹசனல் சீனாவில் பயணம் மேற்கொண்ட போது, சீன-புருனை பொது எதிர்கால சமூகத்தைக் கட்டியமைத்து இரு நாட்டுறவின் புதிய அத்தியாயத்தைத் திறந்து வைப்பதாக இரு தரப்பும் ஒருமனதாக ஒப்புக்கொண்டன. சீன-புருனை உறவுக்கு நான் பெரும் கவனம் செலுத்தி வருகிறேன். ஹசனலுடன் இணைந்து இரு நாட்டின் பன்முக நெடுநோக்கு ஒத்துழைப்பை ஆழமாக்கி மனித பண்பாட்டியல் பரிமாற்றத்தை வலுப்படுத்தி இரு நாட்டு பொது எதிர்கால சமூகத்தின் கட்டுமானத்தை ஆழமாகவும் பயனுள்ளதாகவும் முன்னேற்ற விரும்புகிறேன். இரு நாட்டு மக்களுக்கு மேலிதக நன்மைகளைப் படைப்பதோடு, பிரதேசத்தின் அமைதி மற்றும் செழுமை வளர்ச்சிக்கும் மேலதிக பங்களிப்பை ஆற்ற விரும்புவதாகவும் தெரிவித்தார்.

You May Also Like

More From Author