திடீர் சரிவில் தத்தளிக்கும் பங்குச் சந்தை! ஐடி பங்குகளுக்கு என்ன ஆச்சு?  

Estimated read time 1 min read

பிப்ரவரி 20, 2026 அன்று இந்தியப் பங்குச் சந்தை வர்த்தகத்தின் தொடக்கத்தில் உற்சாகமாகத் தொடங்கி, சென்செக்ஸ் சுமார் 0.8% வரை உயர்ந்தது.
இருப்பினும், மதிய வேளையில் முதலீட்டாளர்கள் லாபப் பதிவில் ஈடுபட்டதால், சென்செக்ஸ் தனது உச்சத்திலிருந்து சுமார் 400 புள்ளிகள் சரிந்தது.
நிஃப்டி 25,550 நிலைக்குக் கீழே வர்த்தகமானது. குறிப்பாக ஐடி துறையில் ஏற்பட்ட தொடர் சரிவு சந்தையின் வளர்ச்சியைப் பாதித்தது.
இதற்கு பல்வேறு காரணங்கள் முன்வைக்கப்படுகிறது. அவை பின்வருமாறு:-
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈரான் தனது அணுசக்தித் திட்டம் குறித்து 10 முதல் 15 நாட்களுக்குள் ஒரு முடிவை எடுக்க வேண்டும், இல்லையெனில் மோசமான விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என எச்சரித்துள்ளார்.
இது மத்திய கிழக்கில் போர் பதற்றத்தை அதிகரித்துள்ளது.

You May Also Like

More From Author