2020முதல் 2024ஆம் ஆண்டு வரை, சீனாவின் சாதன தயாரிப்புத் தொழில் மற்றும் உயர் தொழில்நுட்ப தயாரிப்புத் தொழிலின் ஆண்டு சராசரி கூட்டு மதிப்பு அதிகரிப்பு முறையே 7.9விழுக்காடு மற்றும் 8.7விழுக்காடு ஆகும். 2024ஆம் ஆண்டில் புதிய எரியாற்றல் வாகனங்களின் உற்பத்தி ஒரு கோடியே 30லட்சத்தைத் தாண்டியது. உற்பத்தி மற்றும் விற்பனை அளவு கடந்த 10ஆண்டுகளில் தொடர்ச்சியாக உலகின் முதலிடத்தைப் பிடித்துள்ளது. மேலும், சர்வதேச சந்தையில் சீனக் கப்பல் தயாரிப்புத் தொழிலின் விகிதப் பங்கும் உலக முன்னணியில் உள்ளது என்று 14ஆவது ஐந்தாண்டு திட்டங்களை உயர் தர முறையில் நிறைவேற்றுவது பற்றி சீன அரசவை 9ஆம் நாள் நடத்திய செய்தியாளர் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.