தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.
இதனால், தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது.
அந்தவகையில் திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் நேற்று (செப்.09) இரவு முதல் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக கொடைக்கானலில் 1 முதல் 5ம் வகுப்பு வரை உள்ள தொடக்க பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் சரவணன் உத்தரவிட்டுள்ளார்.