அதிமுக ஒற்றுமையை வலியுறுத்தி முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்த கருத்துக்குப் பின்னர், அவரது கட்சி பொறுப்புகள் பறிக்கப்படுவது போன்ற அடுத்தடுத்த நடவடிக்கைகள் தீவிரம் அடைந்துள்ளன. இதன் தொடர்ச்சியாக, அவரது ஆதரவாளர்கள் எனக் கூறப்படும் முக்கிய நிர்வாகிகளும் அப்பதவிகளில் இருந்து நீக்கப்பட்டு வருகின்றனர்.
அதேபோல், நேற்று இரவு ஈரோடு புறநகர் மேற்கு மாவட்டத்திலுள்ள அம்மாபேட்டை ஒன்றிய செயலாளர் செல்வன், மாவட்ட எம்.ஜி.ஆர் இளைஞரணி செயலாளர் அருள் ராமச்சந்திரன், மாவட்ட தகவல் தொழில்நுட்பப் பிரிவு செயலாளர் செந்தில் ஆகியோர் கட்சி பொறுப்புகளில் இருந்து நீக்கப்படுவதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.