தேவையான பொருட்கள்
தேங்காய் துருவல் – 2 கப்
சுடு தண்ணீர் – 1 கப்
குழம்பு செய்ய :
உருளைக்கிழங்கு – 3
பச்சை பட்டாணி – 1 கப்
வெங்காயம் – 1
தக்காளி – 1
இஞ்சி – 1 துண்டு
பூண்டு – 4 பற்கள்
கிராம்பு – 2
சீரகப்பொடி – 1 tsp
தனியா பொடி – 1 tsp
மிளகு – 1/2 tsp
மஞ்சள் பொடி – 1/2 tsp
கரம் மசாலா – 1 tsp
உப்பு – தே.அ
செய்முறை ::::
முதலில் தேங்காய் பால் அரைத்து, அதை தனியாக எடுத்து வைத்துக்கொள்ளுங்கள்.
குக்கர் வைத்து எண்ணெய் ஊற்றுங்கள். காய்ந்ததும் வெங்காயம் , இஞ்சி பூண்டு சேர்த்து வதக்குங்கள். பின் தக்காளி சேருங்கள்.
வதங்கியதும் கிராம்பு , சீரகப் பொடி, மிளகு , மஞ்சள் பொடி, கரம் மசாலா சேர்த்து வதக்குங்கள்.
அடுத்ததாக உருளைக்கிழங்கு மற்றும் பட்டாணி சேர்த்து கிளறுங்கள். பின் எடுத்து வைத்துள்ள தேங்காய் பால் 1 1/2 கப் சேருங்கள்.
பின் குக்கரை மூடி 3 விசில் வர காத்திருங்கள். விசில் வந்ததும் அடுப்பை அணைத்து பிரஷர் அடங்கியதும் குக்கரை திறந்து, பின் கிளறி உப்பு பார்த்துக்கொள்ளுங்கள். மீண்டும் அடுப்பில் வைத்து 2 கொதி வர வையுங்கள். கொதித்து தேவையான கெட்டிப்பதம் வந்ததும் இறக்கி விடுங்கள்.