இவ்வாண்டின் முதல் 2 திங்கள்காலத்தில் சீனப் பொருளாதார பொருளாதார குறிகாட்டிகள் மீட்சி:என்.பி.எஸ்

Estimated read time 1 min read

சீன அரசவையின் தகவல் தொடர்பு பணியகம் மார்ச் 16ஆம் நாளில், செய்தியாளர் கூட்டம் ஒன்றை நடத்தியது. 2026ஆம் ஆண்டின் முதல் 2 திங்கள்காலத்தில் சீனத் தேசிய பொருளாதார இயக்க நிலைமை குறித்து இதில் வெளியிடப்பட்டது. இவ்வாண்டின் முதல் 2 திங்கள்காலத்தில், சீனாவின் முக்கிய பொருளாதார குறிகாட்டிகள் வேகமாக மீட்சியடைய தொடங்கின.

இக்காலக்கட்டத்தில், ஆண்டுக்கு 2 கோடி யுவானுக்கு மேல் வருமானமுடைய தொழில் நிறுவனங்களின் கூட்டு மதிப்பு, கடந்த ஆண்டை விட 6.3 விழுக்காடு அதிகரித்துள்ளது. உபகரணங்கள் உற்பத்தி மற்றும் உயர் அறிவியல் தொழில் நுட்ப உற்பத்தி துறையின் வளர்ச்சிப் போக்கு சீராக இருந்தது. தேசிய சேவை தொழில் துறையின் உற்பத்தி குறியீடு, கடந்த ஆண்டின் இதே காலத்தில் இருந்ததை விட 5.2 விழுக்காடு அதிகரித்துள்ளது. சமூக நுகர்வுப்பொருட்களின் மொத்த சில்லறை விற்பனைத் தொகை 8 இலட்சத்து 60 ஆயிரத்து 790 கோடி யுவானுடன், கடந்த ஆண்டை விட 2.8 விழுக்காடு உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

You May Also Like

More From Author