ஹூவாங்யேன் தீவு தேசிய நிலை இயற்கைப் பாதுகாப்புப் மண்டலத்தின் கட்டுமானத்திற்குச் சீன அரசவை 10ஆம் நாள் ஒப்புதல் அளித்துள்ளது. ஆனால் இதற்கு பிலிப்பைன்ஸ் வெளியுறவு அமைச்சகம் கடும் எதிர்ப்பைத் தெரிவித்துள்ளது. இது குறித்து, சீன வெளியுறவு அமைச்சகம் பதிலளிக்கையில், ஹூவாங்யேன் தீவு சீனாவின் உரிமைப் பிரதேசமாகும். பிலிப்பைன்ஸின் இந்த எதிர்ப்பைச் சீனா ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது என்றார்.
ஹூவாங்யேன் தீவு சீனாவுக்குரிய உரிமைப் பிரதேசமாகும். அதில் தேசிய நிலை இயற்கைப் பாதுகாப்பு மண்டலத்தைக் கட்டியமைப்பது சீனாவின் இறையாண்மை சார்ந்த விவகாரமாகும். மேலும், கடல் உயிரின சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதற்கான கடப்பாட்டை ஐ.நா கடல்சார் சட்டத்தின் பொது ஒப்பந்தம் உள்ளிட்ட சர்வதேசச் சட்டங்கள் சீனாவுக்கு வழங்கியுள்ளன.
ஹூவாங்யேன் தீவில் தேசிய நிலை இயற்கைப் பாதுகாப்பு மண்டலத்தைச் சீனா கட்டியமைப்பது பல்வேறு நாடுகளிடையில் அங்கீகாரமுடைய செயலாகும். தவிர, இம்மண்டலத்தைக் கட்டியமைத்து ஹூவாங்யேன் தீவு கடற்பரப்பில் மீன்பிடிப்பு நடவடிக்கைகளை ஒழுங்குப்படுத்துவது மட்டுமல்லாமல், மீன்பிடித் தொழிலின் மூலவளம் மற்றும் உயிரின பல்வகைத் தன்மையின் மீட்சிக்கும் துணையாக இருக்கும். இது மீன்பிடித் தொழிலின் தொடரவல்ல வளர்ச்சிக்குப் பெரும் முக்கியத்துவம் வாய்ந்தது.
நீண்டகாலமாக, ஹூவாங்யேன் தீவின் உயிரின சுற்றுச்சூழலின் பாதுகாப்புக்காக, சீனா விடா முயற்சி செய்து வருகிறது. தென் சீனக் கடல் பிரச்சினையில், சீனா பெரிதும் கட்டுப்பாட்டுடன் செயல்பட்டு வருகிறது. ஹூவாங்யேன் தீவில் தேசிய நிலை இயற்கைப் பாதுகாப்பு மண்டலத்தைச் சீனா கட்டியமைப்பது தென் சீனக் கடல் பிரதேசத்தில் பசுமை என்ற ஒளிவூட்டி பிரதேசத்தின் அமைதி மற்றும் தொடரவல்ல வளர்ச்சிக்குப் புதிய உந்து ஆற்றலைக் கொண்டு வரும்.