நாட்டின் ஒருங்கிணைந்த பெரிய சந்தையின் கட்டுமானத்தை ஆழமாக முன்னேற்றுவது என்ற தலைப்பில் சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டி பொதுச் செயலாளரும், அரசுத் தலைவருமான ஷிச்சின்பிங் எழுதிய முக்கிய கட்டுரை செப்டம்பர் 16ஆம் நாள் சியு ஷி எனும் இதழில் வெளியிடப்படவுள்ளது.
நாட்டின் ஒருங்கிணைந்த பெரிய சந்தையைக் கட்டியமைப்பது என்பது, புதிய வளர்ச்சி கட்டமைப்பை உருவாக்கி, புதிய உயர் தர வளர்ச்சியை முன்னேற்றுவதற்கும், உலக போட்டியிடுவதில் முன்முயற்சி எடுப்பதற்கும் முக்கியமானது என்றும், உலகின் இரண்டாவது நுகர்வு சந்தையான சீனாவில், நாட்டின் ஒருங்கிணைந்த பெரிய சந்தையை சீராக கட்டியமைக்க வேண்டும் என்றும் இக்கட்டுரையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.