சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டி அரசியல் குழு உறுப்பினரும், சீன வெளியுறவு அமைச்சருமான வாங்யீ லுப்லியானாவில் ஸ்லோவேனிய தேசிய பேரவைத் தலைவர் மார்கோ லாட்ரிகைச் சந்தித்துரையாடினார்.
அப்போது வாங்யீ கூறுகையில், உயர் நிலையான திறப்பை விரிவாக்கி பசுமை, கரி குறைந்த, தொடரவல்ல வளர்ச்சியை முன்னேற்றி சீனப் பாணி நவீனமயமாக்கலை நனவாக்குவதில் சீனா விடா முயற்சி செய்து வருகிறது. ஸ்வோவேனியாவைக் கூட்டாளியாகவும் நண்பரகாவும் சீனா கருதி வருகிறது. ஸ்லோவேனியாவுடன் இணைந்து, பயனுள்ள ஒத்துழைப்பைத் தொடர்ந்து விரிவாக்கி பலதரப்பு ஒருங்கிணைப்பை வலுப்படுத்தச் சீனா விரும்புவதாகத் தெரிவித்தார்.
நவீனமயமாக்கலில் சீனா ஈட்டியுள்ள சாதனைகளை லாட்ரிக் வெகுவாகப் பாராட்டினார். ஸ்லோவேனிய தேசிய பேரவை, சீனத் தரப்புடன் இணைந்து சட்டமியற்றல் நிறுவனங்களிடையே உள்ள பரிமாற்றத்தை வலுப்படுத்திப் பொருளாதார மற்றும் வர்த்தகம், முதலீடு, பண்பாடு, அறிவியல் தொழில்நுட்பம், கல்வி, விளையாட்டு முதலிய துறைகளில் ஒத்துழைப்புகளை மேற்கொள்வதற்கு மாபெரும் பங்காற்ற விரும்புவதாகவும் லாட்ரிக் கூறினார்.