நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பிசிசிஐ) தலைமை தேர்தல், புதிய தேசிய விளையாட்டு நிர்வாக சட்டத்தின் கீழ் நடத்தப்படும் என விளையாட்டு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இருப்பினும், செப்டம்பர் மாதத்திற்குள் புதிய சட்டத்தின் விதிகள் அறிவிக்கப்படாவிட்டால், உச்ச நீதிமன்றத்தால் அங்கீகரிக்கப்பட்ட லோதா கமிட்டியின் பரிந்துரைகளின்படி தேர்தலை நடத்தலாம் என்றும் அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
அடுத்த ஆறு மாதங்களில் இந்த மசோதாவை முழுமையாக அமல்படுத்த அமைச்சகம் இலக்கு நிர்ணயித்துள்ளது.
ஆனால், அதன் விரிவான வழிகாட்டுதல்கள் மற்றும் ஒழுங்குமுறைகள் அதற்கு முன்பே அறிவிக்கப்படும்.
ஒருமுறை விதிகள் அறிவிக்கப்பட்டால், பிசிசிஐ உட்பட அனைத்து தேசிய விளையாட்டு கூட்டமைப்புகளும் (NSFs) அதன் விதிமுறைகளின்படி தேர்தல்களை நடத்த வேண்டும்.
பிசிசிஐ தலைவர் தேர்தல் புதிய தேசிய விளையாட்டு சட்டத்தில் கீழ் நடத்தப்படும்
