சீனாவைக் கடந்து பிற நாடுகள் அல்லது பிரதேசங்களுக்குச் செல்வதற்கான விசா விலக்க கொள்கைய பன்முங்களிலும் தளர்த்தியதைச் சீன அரசு டிசம்பர் 17ஆம் நாள் வெளியிட்டதையடுத்து, “அடுத்த இடம், சீனா” என்ற தலைப்பு, இணையத்தில் மீண்டும் பிரபலமாகியுள்ளது.
பன்முங்களிலும் என்பது நேரம், பிரதேசம் உள்ளிட்ட பல துறைகளில் விசா விலக்கு கொள்கையைச் சீனா மேம்படுத்தி வெளிநாட்டவர்கள் சீனாவில் பயணம், வணிகம், உறவினர்களைச் சந்தித்தல் ஆகிய செயல்பாடுகளை மேலும் வசதியாக்கியுள்ளது.
அதோடு, சர்வதேச பயணியர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதுடன், சீனாவின் சுற்றுலா உள்ளிட்ட தொழில்களும் மேலதிக வளர்ச்சி வாய்ப்பை பெறும். இவை, பொருளாதார வளர்ச்சிக்கும் புதிய உந்து ஆற்றலைக் கொண்டு வரும். மேலதிக வெளிநாட்டு மக்கள் விசா விலக்கு கொள்கையுடன் சீனாவுக்கு வருவதால் சீனாவுடான அவர்கள் தொடர்பையும் இது மேலும் அதிகரிக்கிறது.
தற்போது, புவிசார் அரசியல் சூழல் நாளுக்கு நாள் பதற்றமாகி வருகிறது. வர்த்தக பாதுகாப்புவாதம் உலகின் வளர்ச்சியைத் தடுத்துள்ளது.
உயர் நிலையான வெளிநாட்டுத் திறப்புப் பணியை சீனா தொடர்ந்து விரிவாக்குவது உலகளாவிய நிலையில் மக்களின் மூலதனம் மற்றும் பொருட்களின் சரக்கு புழக்கத்தை முன்னேற்றி உலகத்துக்கு அரிய மிக்க பங்களிப்பை ஆற்றியுள்ளது. விசா விலக்கத்தை விரிவாக்கம், வணிக சூழலைத் தொடர்ந்து மேம்படுத்துவது முதலியவற்றின் மூலம், உயர் நிலை வெளிநாட்டுத் திறப்புப் பணியை சீனா தொடர்ச்சியாக முன்னேற்றி வருகிறது.
வரும் காலத்தில் மேலதிக வெளிநாட்டு நண்பர்கள் சீனாவுக்கு வருகை தந்து கூட்டு வெற்றி பெறும் வாய்ப்பை அவர்களுடன் பகிர்ந்து கொள்வதைச் சீனா வரவேற்றுள்ளது.
படம்: VCG