பிரதமர் நரேந்திர மோடியின் ஆஸ்திரேலியா அரசுமுறை பயணத்தின் போது, இந்திய அணுமின் நிலையங்களுக்கு தேவையான யுரேனியம் எரிபொருளை ஆஸ்திரேலியாவில் இருந்து இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்வதற்கான இறுதி நிர்வாக வழிமுறைகள் முறைப்படி கையெழுத்தாகியுள்ளன.
மூன்றாவது இந்தியா – ஆஸ்திரேலியா ஆண்டு உச்சிமாநாட்டில் பங்கேற்ற இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானீஸ் ஆகிய இரு தலைவர்களுக்கும் இடையே நடைபெற்ற இருதரப்பு பேச்சுவார்த்தைக்கு பிறகு இந்த வரலாற்று சிறப்புமிக்க அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கடந்த 2015-ஆம் ஆண்டு போடப்பட்ட ‘இந்தியா – ஆஸ்திரேலியா அணுசக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தத்தின்’ கீழ் இந்த புதிய நடைமுறை சாத்தியமாக்கப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலியாவில் இருந்து இந்தியாவுக்கு யுரேனியம் ஏற்றுமதி; பிரதமர் மோடி – அந்தோணி அல்பானீஸ் ஒப்பந்தம்
